உங்கள் வீட்டில் தங்கம் சேரவில்லையா ??? இத படிங்க

0
896
Gold increase solution

(Gold increase solution)

நம்முடைய வீட்டில் எவ்வளவு தான் சேமித்து வைத்தாலும் செல்வம் தங்குவதில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? கவலைப்படாதீங்க… அதற்கும் சில பரிகாரங்கள் உண்டு. மேலைநாடுகளிலும் சில மாந்திரீக முறைகள் இதற்காகப் பின்பற்றப்படுகின்றன.

Gold increase solution

இந்த பரிகாரங்களை எல்லா நாள்களிலும் செய்யலாம். இதற்கென தனியே கால நேரம் பார்க்கத் தேவையில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி இடைவெளியில் இதைச் செய்தால் பலன் இரட்டிப்பாகும்.

ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசியை (safty pin) ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.

இதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிக்கொண்டு, பின் அந்த கின்னத்தை மூடாமல், திறந்திருக்கும்படி வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் வைக்க வேண்டும்.

தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்தால் பலன் இரட்டிப்பாகும்.

இதை தினமும் 2 நிமிடமாவது தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், அன்றாடம் உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். இதை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வாழ்நாள் முழுவதும் கூட இதை கடைபிடிக்கலாம்.
இவ்வாறு செய்து வருவதால் வீட்டில் வளமும் செல்வமும் அதிகரிக்கும்.

Related news :

காலையில் எழும்போது எந்த திசையை பார்த்தால் என்ன பலன் தெரியுமா..!!

நீங்கள் பிறந்த எண்ணின் பலனை பெற உங்க வீட்டில் வைக்க வேண்டிய பொருட்கள் !!!!!

உங்கள் பிறந்த திகதியை சொல்லுங்கள் !!!! உங்களுக்கு கிடைக்கும் மனைவி பற்றி சொல்லுகின்றோம்

வாஸ்துபடி இந்த காட்சிப் பொருளை வடகிழக்கு திசையை 

Our Other Websites :

Keyword:Gold increase solution

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here